search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் தொட்டி"

    • தென்தாமரைகுளம் பேரூராட்சி தலைவர் கார்த்திகா பிரதாப் குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார்.
    • முகிலன்குடியிருப்பு ஊர்த்தலைவர் ஆர்.எஸ்.பார்த்தசாரதி தலைமை தாங்கினார்

    நாகர்கோவில் :

    குழித்துறை கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் முகிலன்குடியிருப்பு முத்தாரம்மன் கோவில் அருகே குடிநீர் தொட்டி திறந்து வைக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சிக்கு முகிலன்குடியிருப்பு ஊர்த்தலைவர் ஆர்.எஸ்.பார்த்தசாரதி தலைமை தாங்கினார். சங்க தலைவர் சிந்து நல்லபெருமாள், செயலர் சவுதாமினி, உறுப்பினர் சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்தாமரைகுளம் பேரூராட்சி தலைவர் கார்த்திகா பிரதாப் குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் முகிலன்குடியிருப்பு ஊர் செயலர் செல்லசிவலிங்கம், பொருளாளர் கிருஷ்ணகோபால், அறங்காவலர்கள் முத்துமாலை, அப்பாத்துரை, சுயம்பு, துணைத்தலைவர் மல்லிகா, வார்டு கவுன்சிலர்கள் பாமா, அமுதா, கோம்பவிளை ஊர்த்தலைவர் நாகமணி, தி.மு.க. நிர்வாகி தாமரை பிரதாப் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • நகராட்சி மன்ற துணை தலைவர் பா.மு.வாசிம்ராஜா பார்வையிட்டார்
    • குடிநீர்தேக்கதொட்டி தூர்வாரப்பட்டு, பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    அரவேணு,

    குன்னூர் நகராட்சி வண்ணராப்பேட்டை ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள குடிநீர்தேக்கதொட்டி தூர்வாரப்பட்டு, அங்கு பராமரிப்பு பணிகள் நடைபெற்றுவருகின்றன.

    இதனை மாநில தி.மு.க விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளரும், நகராட்சி மன்ற துணை தலைவருமான பா.மு.வாசிம்ராஜா பார்வையிட்டார். அப்போது அவருடன்அப்பகுதி நகரமன்ற உறுப்பினர் சாந்தா சந்திரன், மாவட்ட பிரதிநிதி மணிகண்டன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் சிக்கந்தர் மற்றும் நந்தகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கடந்த 2011-ம் ஆண்டு வரை இந்த குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது.
    • குடிநீர் தொட்டி அமைந்து உள்ள இடம் தொடர்பாக சில சிக்கல்கள் உள்ளன.

    திருவான்மியூர்:

    துரைப்பாக்கம் அடுத்த ஒக்கியம்துரைப்பாக்கம், ராஜு நகரில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. பயன்பாட்டில் இல்லாத இந்த குடிநீர் தொட்டி இடிந்து விழும் நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.

    ஆனால் இந்த குடிநீர் தொட்டியை அப்புறப்படுத்த இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிகை எடுக்காமல் உள்ளனர். பொதுமக்கள் இந்த குடிநீர் தொட்டி அருகே செல்லாமல் இருக்க அந்த பகுதியை சுற்றிலும் சுமார் 20 அடி உயரத்துக்கு இரும்பு தகடுகள் வைக்கப்பட்டு உள்ளன.

    எனினும் குடிநீர் தொட்டி உள்ள இடம் அருகே வாகனங்கள் செல்லும் முக்கிய சாலை, குடியிருப்புகள், கடைகள் உள்ளன. பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலையோரத்தில் இடிந்து விழும் நிலையில் நிற்கும் இந்த ஆபத்தான குடிநீர் தொட்டியை முற்றிலும் இடித்து அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, துரைப்பாக்கம் ஊராட்சியாக இருந்த போது கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. பின்னர் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியாக மாறியதும் சென்னை மெட்ரோ வாட்டரின் கட்டுப்பாட்டில் வந்தது.கடந்த 2011-ம் ஆண்டு வரை இந்த குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. பின்னர் தொட்டியின் தூண்கள் பெயர்ந்து, சிமெண்டுகள் பலம் இழந்ததால் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. இப்போது வெறும்காட்சி பொருளாகவே காணப்படுகிறது.

    இந்த குடிநீர் தொட்டியின் பின்புறம் மார்க்கெட், அருகில் கட்டிடங்கள், வாகனங்கள் அதிகம் செல்லும் சாலை உள்ளன. எனவே ஆபத்தான நிலையில் காணப்படும் இந்த குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் என்றனர்.

    இதுகுறித்து மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் கூறும்போது, குடிநீர் தொட்டி அமைந்து உள்ள இடம் தொடர்பாக சில சிக்கல்கள் உள்ளன. இந்த இடம் மெட்ரோ வாட்டருக்கு முறையாக ஒப்படைக்கப்படவில்லை. இந்த பகுதியில் கழிவுநீர் பம்பிங் ஸ்டேஷன் கட்ட திட்டமிட்டுள்ளோம். விரைவில் குடிநீர் தொட்டியை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • சேதமடைந்த குடிநீர் தொட்டிகளை மாற்ற வி.சி.க. கோரிக்கை விடுத்துள்ளது.
    • எம்.எல்.ஏ. தொகுதி நிதியில் இருந்து புதிய மோட்டார் வாங்கி கொடுக்க வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் 2 தொட்டிகள் வடக்கு தெருவில் அமைந்துள்ளது. 50 வருடத்திற்கு மேலாக இந்த குடிநீர் தொட்டிகள் அங்கு உள்ளன. ஒரு தொட்டி ஒரு லட்சத்து 60 ஆயிரம் லிட்டர், மற்ெறாரு தொட்டி 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்டவை.

    தற்போது இந்த தொட்டிகள் சேதமடைந் துள்ளன. இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி கீழக்கரை நகர செயலாளர் பாசித் இல்யாஸ் கூறுகையில், கீழக்கரையில் உள்ள 2 குடிநீர் தேக்க தொட்டிகள் மிகவும் பழு தடைந்துள்ளது. அடிக்கடி மின் மோட்டார் வேலை செய்யாத காரணத்தால் கீழக்கரை பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

    கீழக்கரை சுற்றுவட்டார பகுதிகளில் 700-க்கும் மேற்பட்ட பைப் லைன்கள் பொதுமக்கள் பணம் கட்டி மண்டலம் வாரியாக வீடு தேவைகளுக்கு உபயோகப் படுத்துகிறார்கள். பொது மக்களும் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.12 ஆயிரம் வரை செலுத்தி விட்டு பைப் லைன் இணைப்புகளுக்கு பணம் கட்டுகிறார்கள். தண்ணீர் வரியும் செலுத்துகிறார்கள்.

    அரசு சார்பாகவும் 39 இடங்களில் காவிரி கூட்டு குடிநீர் வழங்கப்பட்டு வரு கிறது. இந்த நிலையில் அடிக்கடி மின் மோட்டார் பழுதடைவதால் கீழக்கரை மக்களுக்கு குடிநீர் வழங்க முடியாமல் போகிறது. கடற்கரை ஓரங்களில் உப்பு தண்ணீராக வருவதால் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகி றார்கள்.

    அரசு புதிதாக தொட்டி கள் கட்டும் வரை மின் மோட்டார் படிக்கட்டு கள் கட்ட வேண்டும். 9 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய தொட்டிகள் கட்ட வேண்டும். எம்.எல்.ஏ. தொகுதி நிதியில் இருந்து புதிய மோட்டார் வாங்கி கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குடிநீர் தொட்டியில் இருந்து வெளியேறும் பைப்புகள் முழுவதும் பாசிபடர்ந்து குடிநீரில் கலந்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
    • அபாய நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருவள்ளூர்:

    பூண்டி ஒன்றியத்துக்குட்பட்டது திருப்பாச்சூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் புதிய திருப்பாச்சூர், பழைய திருப்பாச்சூர், கொசவன்பாளையம், பள்ளிஅறை குப்பம், கோட்டை காலனி, பெரிய காலனி, தாட்கோ நகர், அம்பேத்கர் நகர், வசந்தம் நகர் என 9 குக்கிராமங்களில் 12 வார்டுகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த திருப்பாச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொசவன்பாளையம் பஸ் நிலையம் அருகே கடந்த 39 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி உள்ளது.

    இந்த குடிநீர் தொட்டியில் உள்ள தூண்கள் பல இடங்களில் சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் காணப்படுகிறது. இதனால் அதன் அருகில் செல்லவே அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    மேலும் குடிநீர் தொட்டியில் இருந்து வெளியேறும் பைப்புகள் முழுவதும் பாசிபடர்ந்து குடிநீரில் கலந்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். எனவே இடிந்து விழும் அபாயத்தில் உள்ள குடிநீர் தொட்டியை மாற்றி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, இந்த குடிநீர் தொட்டி பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால் அதன் தூண்களில் இருந்த சிமெண்டுகள் பெயர்ந்து வலுவிழந்து காணப்படுகிறது. எனவே அபாய நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • பேரூராட்சி தலைவர் கார்த்திகா பிரதாப் தொடங்கி வைத்தார்
    • சின்டெக்ஸ் மற்றும் பைப்புகள் அமைத்து குடிநீர் வழங்கும் பணி நடைபெற உள்ளது.

    கன்னியாகுமரி :

    தென்தாமரைகுளம் பேரூராட்சியில் 15-வது நிதிக்குழு மானியத்தில் ரூ.10.20 லட்சம் மதிப்பில் முகிலன் குடியிருப்பு, இலந்தையடிவிளை, தென்தாமரைகுளம், வெள்ளையன் தோப்பு உள்ளிட்ட ஊர்களில் சின்டெக்ஸ் மற்றும் பைப்புகள் அமைத்து குடிநீர் வழங்கும் பணி நடைபெற உள்ளது.

    இதன் முதற்கட்டமாக 9-வது வார்டுக்குட்பட்ட வெள்ளையன் தோப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்காக சின்டெக்ஸ் தொட்டி அமைக்கும் பணி தொடங்கியது.

    வார்டு கவுன்சிலர் ஆல்வின் தலைமை தாங்கினார். வெள்ளையன்தோப்பு ஊர் தலைவர் ரெத்தின சிகாமணி, முன்னாள் தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி தலைவி கார்த்திகா பிரதாப் கலந்துகொண்டு சின்டெக்ஸ் தொட்டி அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகி தாமரைபிரதாப், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி கவுன்சிலர் ராகவன், வெள்ளையன்தோப்பு ஊர் துணை தலைவர் தங்கதுரை, செயலாளர் சுயம்புலிங்கம், இணை செயலாளர் பொன்னுலிங்கம், பொருளாளர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • குதிரை ஒன்று எதிர்பாராத விதமாக குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து அதிக சத்தம் எழுப்பியது.
    • கட்டிடத்தில் வேலை பார்த்தவர்கள் உடுமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    உடுமலை :

    உடுமலை அடுத்துள்ள கிரீன் பார்க் லேஅவுட் பகுதியில் புதியதாக பிரகதீஸ் என்பவர் வீடு ஒன்று கட்டி வருகின்றார். இந்த நிலையில் அப்பகுதியில் மேய்ச்சலுக்கு வந்த குதிரை ஒன்று எதிர்பாராத விதமாக குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து அதிக சத்தம் எழுப்பியது.

    உடனே கட்டிடத்தில் வேலை பார்த்தவர்கள் உடுமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு உடுமலை தீயணைப்பு நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று குடிநீர் தொட்டியில் தவறி விழுந்த குதிரையை ராட்சத கயிறு மூலம் சுமார் ஒரு மணி நேரம் போராடி வெளியே கொண்டு வந்தனர்.குதிரையை மீட்ட தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

    • இந்த பள்ளியில் கல்வியிலும், விளையா ட்டிலும் மாணவிகள் சிறந்து வருகின்றனர்.
    • மாத சம்பளத்தில் ரூ.1.5 லட்சம் செலவில் பள்ளிக்கு இலவசமாக குடிநீர் தொட்டி கட்டி பராமரித்து வருகிறார்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சியை சேர்ந்த சூளகிரி பேரிகை செல்லும் ரீங் ரோட்டில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்து உள்ளது.

    இந்தபள்ளிக்கு சூளகிரி சுற்றுவட்டாரத்தில் உள்ள 100-க்கு மேற்பட்ட கிராமங்களில் இருந்து 1835 மாணவிகள் பள்ளிக்கு வருகின்றனர். அவர் களுக்கு 47 ஆசிரியர்கள் வருகை தந்து கல்வி அளித்து வருகின்றனர்.

    பொதுவாக இந்த பள்ளியில் கல்வியிலும், விளையா ட்டிலும் மாணவிகள் சிறந்து வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் நாகலட்சுமி என்பவர் பணியாற்றி வருகிறார். தற்போது வயது மூப்பு காரணமாக மே மாத கடைசியில் பணி ஓய்வு பெற உள்ளார்.

    இந்நிலையில் பள்ளி நலனுக்காக மாணவிகள், ஆசிரியர்கள் குடிநீர் வசதிக்காகவும் பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியர் நாகலட்சுமி மாத சம்பளத்தில் ரூ.1.5 லட்சம் செலவில் பள்ளிக்கு இலவசமாக குடிநீர் தொட்டி கட்டி பராமரித்து வருகிறார். அவரை மாணவிகள், ஆசிரியர்கள், பி,டி,ஏ நிர்வாகிகள், பொதுமக்கள் என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

    • அலுவலகத்தின் நுழைவாயில் அருகே நீண்ட நாட்களாக குடிநீர் தொட்டி திறந்தவெளியில் பழுதாகி காணப்படுகிறது.
    • விபத்து ஏற்படும் முன்பு மாவட்ட நிர்வாகம் குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும்

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வருவாய் கோட்டத்தின் உட்பட்ட 32 ஊராட்சிகளில் புலிகரை, மாரண்டஹள்ளி, பாலக்கோடு, வெள்ளிச்சந்தை ஆகிய வருவாய் கிராமங்களிலிருந்து தினதோறும் தங்கள் அடிப்படை தேவையான ஜாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், பட்டா, சிட்டா மாறுதல், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, ஓய்வூதியம், உதவித்தொகை, உள்ளிட்டவைகளுக்கும் அரசு கருவூலகம், பொதுபணிதுறை அலுவலகத்திற்கும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், குழந்தைகள் என வந்து செல்லுகின்றனர்.

    இந்த அலுவலகத்தின் நுழைவாயில் அருகே நீண்ட நாட்களாக குடிநீர் தொட்டி திறந்தவெளியில் பழுதாகி காணப்படுகிறது.

    விபத்து ஏற்படும் முன்பு மாவட்ட நிர்வாகம் குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் அருகே வீடுகள் மற்றும் ஒவ்வொரு வீட்டுக்கும் மின் விநியோகம் செய்யும் மின்சார கம்பிகள் அமைந்துள்ளன.
    • 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் காங்கிரீட் தூண்கள் பழுதடைந்து தூண்களில் உள்ள கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் சேதம் அடைந்துள்ளது.

    செங்கல்பட்டு:

    காட்டாங்கொளத்தூர் ஊராட்சியில் அமைந்துள்ள திருவடிசூலம் ஊராட்சிக்கு உட்பட்ட புலிக்குடிவனம் கிராமத்தில் 150 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

    இப்பகுதியில் 40 வருடங்களுக்கு முன்பு காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலமாக கிணற்றின் அருகே 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.

    கிணற்றில் இருந்து தண்ணீரை எடுத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நிரப்பி அங்குள்ள குடும்பங்களுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது புலிக்குடிவனம் கிராமத்தில் மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்ற 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் காங்கிரீட் தூண்கள் பழுதடைந்து தூண்களில் உள்ள கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் சேதம் அடைந்துள்ளது.

    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் அருகே வீடுகள் மற்றும் ஒவ்வொரு வீட்டுக்கும் மின் விநியோகம் செய்யும் மின்சார கம்பிகள் அமைந்துள்ளன. மிகவும் ஆபத்தான நிலையில் திருவடிசூலம் ஊராட்சியில் புலிக்குடிவனம் கிராமத்தில் அமைந்துள்ள பழுதடைந்து உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அப்புறப்படுத்தி அதே இடத்தில் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க வேண்டும். பாதுகாப்பற்ற நிலையில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் அருகே அமைந்துள்ள திறந்தவெளி கிணற்றுக்கு கம்பி வலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நாய் அழுகிய நிலையில் காணப்பட்டதால் அது இறந்து பல நாட்கள் இருக்கலாம் என தெரிகிறது.
    • தொட்டிக்குள் கிடந்த நாயை அகற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட புதுக்கோட்டை பஞ்சாயத்து பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 4 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிள்ளையார்கோவில் அருகில் உள்ள நீர்த்தேக்க தொட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் கட்டப்பட்டது.

    சுமார் 60 அடி உயரம் கொண்ட இந்த நீர்தேக்க தொட்டியில் 60 ஆயிரம் லிட்டர் தண்ணீர் சேமித்து வைக்கலாம். இந்த தொட்டியில் இருந்து அந்த பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

    பஞ்சாயத்து நிர்வாகத்தின் உத்தரவுப்படி இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்ய அதன் ஆபரேட்டர் கடந்த சனிக்கிழமை தண்ணீர் ஏற்றாமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் நேற்று காலை தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய வந்தபோது துர்நாற்றம் வீசி உள்ளது. இதனால் அச்சம் அடைந்த டேங்க் ஆபரேட்டர் இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. போலீசார் விரைந்து வந்து தொட்டியின் மீது ஏறி பார்த்தபோது அதற்குள் நாய் இறந்து கிடந்துள்ளது. நாய் அழுகிய நிலையில் காணப்பட்டதால் அது இறந்து பல நாட்கள் இருக்கலாம் என தெரிகிறது.

    இதுகுறித்து போலீசார், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மேல்நிலை நீர்தேக்க தொட்டியை ஆய்வு செய்தனர்.

    தொட்டிக்குள் கிடந்த நாயை அகற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் தொட்டி சுத்தம் செய்யப்பட்டது.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவம் குறித்து பஞ்சாயத்து தலைவர் காளீஸ்வரி எம்.புதுப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார்.

    நாயை கொன்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்குள் யாரேனும் போட்டுவிட்டு சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் குடிநீர் தொட்டி கட்ட யூனியன்சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது.
    • பண்ருட்டி யூனியன் அலுவலகம் முன்பு இன்று காலை தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே மணப்பாக்கம் பஞ்சாயத்து உள்ளது/ இதன் தலைவராக சியாமளா சுரேந்தர் உள்ளார். இந்த பஞ்சாயத்தில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் குடிநீர் தொட்டி கட்ட யூனியன்சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது. இதனை அறிந்த பஞ்சாயத்து தலைவர் சியாமளா சுரேந்தர் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி டெண்டர் விடப்பட்டதாக கூறி பண்ருட்டி யூனியன் அலுவலகம் முன்பு இன்று காலை தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டார். இதனை அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகசிகாமணி அவரிடம் பேச்சுவார்த்ைத நடத்தினார்.

    ×